உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்போர்ன் மைதானத்தின் அடையாளத்தை அழிக்கும் இந்திய மைதானம்!.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்போர்ன் மைதானத்தின் அடையாளத்தை அழிக்கும் இந்திய மைதானம்!.



big stadium in india

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் குஜராத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காண முடியும்.

உலகிலேயே மிகப்பெரிய மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட இது பெரியதாக அமையும் என கூறப்படுகிறது.

63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் இந்த மைதானத்தின் கட்டுமானத்தின்  மதிப்பீடாக ரூ.700 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் கார்களும் ,10 ஆயிரம் இருசக்கரவாகனங்களும் நிறுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



 

இந்த மைதானம் பயன்பாட்டிற்கு வரும் போது இந்தியாவை பெருமைப்படுத்தும் வகையிலும், இந்த மைதானம் நாட்டின் பெருமைக்குரிய சின்னமாகவும் அமையும் என்று குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவர் அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.