பந்து ஸ்டெம்பில் படாமலே ரன் அவுட் ஆன ஜடேஜா!! ரன் அவுட் கொடுத்த அம்பயர்..



bbstructs-the-field-jadeja-run-out

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த நேற்றைய போட்டியில் சென்னை அணி வீரர் ஜடேஜா மிகவும் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்தார்.

சொதப்பிய ராஜஸ்தான் அணி

நேற்று நடந்த போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த சீசனில் மிகவும் வலுவாக இருக்கும் ராஜஸ்தான் அணி, சென்னைக்கு எதிராக பேட்டிங்கில் பயங்கரமாக சொதப்பியது.

jadeja

தொடக்க வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணி சார்பாக ரியான் பராக் 35 பந்துகளில் 47 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.

இதையும் படிங்க: "அவருக்கு வயசாயிடுச்சு அதனால..." ரஜினியை பற்றி தல தோனி..தற்போது ட்ரெண்டிங்கில் உலவும் சூப்பர் ஸ்டார் ட்வீட்.!

சென்னை அணிக்கு எளிமையான இலக்கு

146 என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ரவீந்த்ரா மற்றும் கெய்க்வாட் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ரவீந்த்ரா சற்று அதிரடியாக தொடங்கி 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து மிட்சேல், மொயின் அலி, துபே என அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சென்னையின் வெற்றி கேள்விக்குறியானது.

jadeja

ஒருகட்டத்தில் ஜடேஜா களமிறங்கி சற்று அதிரடியாக விளையாட தொடங்கிய நிலையில், அவர் மிகவும் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 16வது ஓவரின் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட, 5வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா, தேர்ட் மேன் திசையில் அடித்த பந்திற்கு ஜடேஜா இரண்டாவது ரன் ஓட முயன்றார். ஆனால் ருதுராஜ் வேண்டாமென்று கத்தினார். இதனால் ஜடேஜா மீண்டும் நான் ஸ்ட்ரைக்கர் திசைக்கு ஓட முயன்றார்.

வித்தியாசமாக ஆட்டமிழந்த ஜடேஜா

அப்போது ஜடேஜாவை ரன் அவுட் செய்ய, ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் சாம்சன் பந்தை நேராக நான் ஸ்ட்ரைக்கர் திசையை நோக்கி வீசினார். அவர் வீசிய பந்து ஜடேஜா மேல் பட்டது. இதனால் ராஜஸ்தான் அணி நடிவரிடம் முறையிட்டது. 3rd அம்பயர் வரை ரிவியூ சென்று, பீல்டருக்கு இடையூறு தரும்வகையில் ஜடேஜா ஓடியதாக அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

jadeja

சென்னை அணி வெற்றி

இதனால் ஜடேஜா ஐபில் விதிமுறைப்படி ஆட்டமிழந்து வெளியேறினார். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் ஃபீல்டிங் செய்யவிடாமல் தடுத்ததற்காக யூசுப் பதான் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். தற்போது இந்த பட்டியலில் ஜடேஜாவும் இணைந்துள்ளார்.

ஜடேஜா ஆட்டமிழந்தாலும், சென்னை அணி இறுதியில் சிறப்பாக விளையாடி 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.

இதையும் படிங்க: 3ஆவது டி20: யாரும் எதிர்பார்க்காத மாற்றத்துடன் களமிறங்கும் இந்தியா..! டாஸ் வென்று பவுலிங் தேர்வு