விளையாட்டு

பேட்டை திருப்பி பாகிஸ்தான் முன்னாள் வீரரின் மகன் களத்தில் செய்த காரியம்..! வைரலாகும் வீடியோ..!

Summary:

Azam Khan fumbled his bat while running

பாக்கிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் T20 போட்டிகள் நடந்துவருகிறது. இதில் நேற்றைய போட்டியில், கராச்சி கிங்ஸ் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் அடித்தது.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி களமிறங்கியது. குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில், முன்னாள் பாகிஸ்தான் அணி வீரர் மொயின் கானின் மகன் அசாம் கான் விளையாடிவருகிறார். நேற்றைய போட்டியில் அசாம் கானின் அதிரடியால் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 18 ஓவர்களிலையே 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

30 பந்தில் 46 ரன்களை விளாசிய அசாம் கான் ஒரு கட்டத்தில் எதிரணியினர் தன்னை ரன் அவுட் செய்ய முயலும்போது வேகமாக இலக்கை நோக்கி ஓடிய அசாம் கான் திடீரென பேட்டை தலைகீழாக திருப்பி பேட்டின் ஹேண்டிலை எல்லை கோட்டில் வைத்தார். இவ்வாறு  பேட்டை திருப்புவதால், கிரிக்கெட் பேட் விரைவில் எல்லை கோட்டின் உள்ளே செல்லும் என கூறப்படுகிறது.

அசாம் கானின் இந்த சமயோஜித முடிவால் அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


Advertisement