விளையாட்டு

சூப்பர் பிளேயர்!! அவருக்குப்போய் கொரோனா பாதிப்பு! தொடர் சிக்கலில் டெல்லி அணி!!

Summary:

டெல்லி அணி வீரர் அக்ஸர் படேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி அணி வீரர் அக்ஸர் படேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அதேநேரம் கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில் டெல்லி அணிக்காக விளையாட இருக்கும் இந்திய அணி வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தொடர்ந்து 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்றும், டெல்லி அணி மருத்துவர்கள் அவரை கண்காணிப்பார்கள் எனவும் டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த 10 நாட்களில் அவர் உடற்பயிற்சி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதற்க்கு முன்னதாக கொல்கத்தா அணி வீரர் நிதிஷ் ராணாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது, மேலும் மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அக்சர் படேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளில் அக்சர் படேல் சிறப்பாக விளையாடி அசத்தினார். இதனால் ஐபில் போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடுவர் என ஒரு நம்பிக்கை எழுந்தது. ஆனால் அவர் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டிருப்பது டெல்லி அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


Advertisement