விளையாட்டு

புதிய கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலியா மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் அலிசா

Summary:

australia wicket keeper alyysa made guinness record

ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக இருந்து வருபவர் அலிசா. இவர் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவியும் ஆவார். அலிசா மிகவும் உயரமான கேட்ச் பிடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அலிசா மகளிர் கிரிக்கெட் அரங்கில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். இவரது தந்தையின் சகோதரர் இயான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக 1980 முதல் 1999 வரை விளையாடியுள்ள இயான் அதிகமாக விக்கெட்டுகளை வீழ்த்திய விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். 

தன்னை சுற்றி கிரிக்கெட் ஜாம்பவான்களை கொண்டுள்ள அலிசா தற்பொழுது கிரிக்கெட் உலகில் புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். மிகவும் உயரமான தூரத்திலிருந்து வந்த பந்தை கேட்ச் பிடித்து இந்த சாதனையை இவர் படைத்துள்ளார். இவர் தற்பொழுது 82.5 மீட்டர் உயரத்தில் இருந்து வந்த பந்தை கேட்ச் பிடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 62 மீட்டர் உயரத்தில் இருந்து வந்த பந்தை பிடித்ததே சாதனையாக இருந்தது. இதனை இப்போது அலிசா முறியடித்துள்ளார்.


Advertisement