விளையாட்டு வீடியோ

வெற்றி கொண்டாட்டம்! அதற்காக இப்படியா? ஷூவை கழற்றி ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த காரியத்தை பார்த்தீங்களா!!

Summary:

வெற்றி கொண்டாட்டம்! அதுவும் இப்படியா? ஷூவை கழற்றி ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த காரியத்தை பார்த்தீங்களா!!

ஐசிசி டி20 உலககோப்பை போட்டிக்கான இறுதி ஆட்டம் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.  அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றது. ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் சிறப்பான ஆட்டத்தை தொடங்கி வைத்தார். 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து மிட்சேல் மார்ஷ் 50 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்நிலையில் வெற்றிக்குப் பின் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் இருவரும் ஷூவை கழற்றி அதில் குளிர்பானத்தை ஊற்றி குடித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

 


Advertisement