அஸ்வினை மாறி மாறி விமர்சனம் செய்தார்களே.! நேற்றைய போட்டியில் வாய்ப்பு கிடைத்தும் அவுட் ஆக்காத அஸ்வின்.!

அஸ்வினை மாறி மாறி விமர்சனம் செய்தார்களே.! நேற்றைய போட்டியில் வாய்ப்பு கிடைத்தும் அவுட் ஆக்காத அஸ்வின்.!



aswin stopped mankads wicket yesterday match


துபாயில் நேற்று நடைபெற்ற 19 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் மன்கட் முறையில் அவுட் செய்யாமல் பெங்களூரு பேட்ஸ்மேன் ஆரோன் பின்சை எச்சரித்தார் டெல்லியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

கடந்த ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த போது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தார், அந்த அவுட் அது விதிப்படி சரிதான் என கூறப்பட்டது. ஆனால் கிரிக்கெட்டில் இது ஆட்டத்தின் மீதான வீரரின் நல்லுணர்வுக்கு எதிரானது என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், மன்கட்  விக்கெட் கிரிக்கெட்டின் விளையாட்டு தன்னம்பிக்கையை குலைக்கிறது. இதனால் அஸ்வினிடம் அதை செய்ய வேண்டாமென சொல்வேன் என டெல்லியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நடப்பு சீஸன் ஆரம்பிப்பதற்கு முன்னரே தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில் நேற்றைய  ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை அஸ்வின் வீசிய போது எதிர்முனையில் நின்று கொண்டிருந்த பின்ச் பந்து வீசுவதற்கு முன்பே கிரீஸை விட்டு நகர்ந்திருந்தார். அதை  கவனித்த அஸ்வின் பந்து வீசாமல் மன்கட் முறையில் அவுட் செய்து விடுவேன் என பின்சை எச்சரிப்பது போல சிரித்த முகத்துடன் சென்றார் அஸ்வின்.