தோனி எப்போது ஓய்வு பெறுகிறார்? பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு!
கடந்த ஜனவரி மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜோதிடர் பாலாஜி 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றி கூறுகையில், இந்த ஆண்டு கணிப்பின் படி, 2019 உலகக் கோப்பை இங்கிலாந்து நாட்டில் நடக்கிறது.
இந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேற வாய்ப்பு உள்ளது. அரையிறுதியில், இந்தியா, நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து அணியுடன் மோதும்.
SHOCKING : This guy predicted #CWC19 scenario long back! #TeamIndia #INDvsNZ #NewZealand pic.twitter.com/DHUwpmZFbs
— Tamilnadu Theatres Association (@TN_Theatres) 11 July 2019
அதில், நியூசிலாந்து அணி வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன், தொடர் நாயகனாக தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது.இந்த தொடரில் நியூசிலாந்து அணி தான் 2019 உலகக் கோப்பையை கைப்பற்றும் என கூறியிருந்தார். அவர் கூறியதில் அனைத்துமே சரியாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து வெற்றி பெற்றதற்கு என்ன காரணம் என்று அனைவருக்கும் தெரியும்.
இந்தநிலையில் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஜோதிடர் பாலாஜி ஹாஸனிடம் தோனி இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுவாரா இல்லை ஓய்வில் செல்வாரா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜோதிடர் கூறுகையில், "உடனே தோனி ஓய்வு பெற வாய்ப்பு இல்லை. அவரது ஜாதக படி 2019 குருப்பெயர்ச்சிக்கு பிறகு அவரது ஓய்வை அறிவிப்பார். அதாவது நவம்பர் - டிசம்பர் மாதத்திற்கு பிறகு அவரது ஓய்வை அறிவிப்பார் அல்லது T20 உலககோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவிப்பார் என கூறியுள்ளார்.