புருஷன புல்லுக்கட்டுபோல் அலேக்கா தூக்கிய அனுஷ்கா ஷர்மா!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..Anushka Sharma life up his husband viral video

விராட்கோலியை தூக்கிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அனுஸ்கா ஷர்மா.

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற நடச்சத்திர ஜோடிகளின் ஒன்று விராட்கோலி - அனுஸ்கா ஷர்மா ஜோடி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட்கோலி, பிரபல பாலிவுட் நடிகையாக வலம்வந்த நடிகை அனுஸ்கா ஷர்மாவை காதலித்து, இருவரும் கடந்த 2017 ஆம் ஆனது திருமணம் செய்துகொண்டனர்.

anushka sharma

இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு "வாமிகா" என பெயரும் வைத்தனர். இந்நிலையில் அனுஸ்கா ஷர்மா அல்லது விராட்கோலி இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம்.

அந்த வகையில், தனது கணவர் விராட்கோலியை அனுஸ்கா ஷர்மா அலேக்கா தூக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விராட்கோலியை கட்டிப்பிடித்து முதலில் ஒரு இன்ச் மேலே தூக்கும் அவர், பின்னர் மீண்டும் முயற்சி செய்து சற்று கூடுதல் உயரத்திற்கு தூக்குகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.