சந்தேகத்திற்குள்ளான இந்திய வீரரின் பந்துவீச்சு; தடை விதித்து உத்தரவிட்டுள்ளது ஐசிசி.!

சந்தேகத்திற்குள்ளான இந்திய வீரரின் பந்துவீச்சு; தடை விதித்து உத்தரவிட்டுள்ளது ஐசிசி.!


ampathi-rayudu-bowling-dout---icc

இந்திய வீரர் அம்பத்தி ராயுடு பந்து வீச்சு முறை சந்தேகத்திற்கு இடமாக உள்ளது என்று தெரிவித்துள்ள ஐசிசி அவருடைய பந்து வீச்சுக்கு தடை விதித்துள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது. T20 போட்டிகள் மட்டும் சமநிலையில் முடிந்தது. இந்நிலையில் சிட்னியில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு 2 ஓவர்கள் பந்து வீசி 13 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

Ambati rayudu

இந்நிலையில் அவரது பந்துவீச்சு முறை சந்தேகத்திற்கு இடமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது ஐசிசி. இதனால் இன்னும் 14 நாட்களுக்குள் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. சோதனைக்கு பிறகே அவர் பந்துவீச அனுமதிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் டெஸ்ட் போட்டிகளிலும் பந்துவீச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது ஐசிசி.