ஐபிஎல் தொடருக்கு முன் சத்தமே இல்லாமல் முடிந்த நிச்சயதார்த்தம்.. விஜய் சங்கர் வெளியிட்ட சர்ப்ரைஸ் புகைப்படங்கள்!All rounder vijay shankar got engaged

இந்திய கிரிக்கெட் அணியில் 2019 ஆம் ஆண்டில் ஆல் ரவுண்டராக இடம்பிடித்தவர் விஜய் சங்கர். இந்தியாவின் உலகக்கோப்பை அணியிலும் இடம்பெற்றார்.

எதிர்பாராத நேரத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி புகழ்பெற்றார் விஜய் சங்கர். உலகக்கேப்பை அணியில் விஜய் சங்கர் இடம்பெற்றது பல்வேறு விமர்சனங்களை பெற்றது. 

Vijay shankar

உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விஜய் சங்கர் பாதியிலேயே நீக்கப்பட்டார். அதன் பின்னர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்.

ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் யூஏஇக்கு புறப்படும் சமயத்தில் தனது நிச்சயதார்த்த புகைப்படத்தினை விஜய் சங்கர் வெளியிட்டுள்ளார். அவரது வருங்கால மனைவியின் பெயர் வைசாலி விஸ்வேஷ்வரன் ஆகும்.

View this post on Instagram

💍 PC - @ne_pictures_wedding

A post shared by Vijay Shankar (@vijay_41) on