விளையாட்டு

தொடங்கியது பலபரீட்சை! டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு

Summary:

aind vs aus first odi sydney

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை சிறப்பாக ஆடியது. இந்நிலையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆனது இன்று சிட்னியில் துவங்குகிறது. இந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

சிட்னியில் இன்று துவங்கும் போட்டியில் சர்வதேச அளவில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய அணியும் ஆறாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணி மிகவும் பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியில் புதிய வீரர்கள் மிகவும் தடுமாற்றத்துடன் காணப்படுகின்றனர்.

இந்திய அணியை பொறுத்தவரை உற்சாகமாக பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலுமே சிறந்து விளங்குகின்றனர். பேட்டிங்கில் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் வலிமை சேர்க்கும் விதமாக உள்ளனர். நீண்ட நாட்களாக அமைதியாக இருந்து வரும் டோனிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பவுலிங்கை பொருத்தவரை வேதத்தில் புவனேஷ் குமார், சாமி, கலீல் அஹ்மத் ஆகியோர் இணைந்துள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக ஜடேஜா மற்றும் குலதீப் யாதவ் ஆடுகின்றனர். திடீர் சர்ச்சை சர்ச்சையில் சிக்கிய கார்டிக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை.

இந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி மற்றும் ஆரோன் பின்ச் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கியுள்ளனர்.


Advertisement