புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சொதப்பும் ரோஹித்; கலக்கும் சூர்யகுமார்..!! மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய மும்பை..!!
பெங்களூரு அணியை வீழ்த்திய மும்பை அணி புள்ளி பட்டியலில் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 54 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 54 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பாப்-டூ-பிளசி-விராட் கோலி ஜோடி இன்னிங்சை தொடங்கியது. தொடக்கத்தில் விராட் கோலி 1, அனுஜ் ராவத் 6 ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர் பாப்-டூ-பிளசியுடன் இணைந்த கிளென் மேக்ஸ்வெல் மும்பை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 25 பந்துகளில் அரைசதம் விளாசிய மேக்ஸ்வெல் 68 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாகவும், பொறுப்புடனும் விளையாடிய டூ-பிளசி 65 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சூராவளியாக சுழன்றடித்து 30 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்தது.
இதனை தொடர்ந்து 200 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணிக்கு இஷான் கிஷன்-ரோஹித் சர்மா ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. அதிரடியாக மட்டையை சுழற்றிய இஷான் கிஷன் 42 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நேஹல் வதேரா, சூர்யகுமார் யாதவுடன் இணைந்தார்.
சூர்யகுமார் அதிரடி காட்ட, மறுமுனையில் வதேரா அவருக்கு உறுதுணையாக பொறுப்புடன் விளையாடினார். 26 பந்துகளில் அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் 83 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இருந்த போதிலும் இலக்கை நெருங்கிவிட்ட மும்பை அணி 16.3 ஓவர்களில் வதேராவின் சிக்ஸருடன் இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் அந்த அணி புள்ளி பட்டியலில் 3 இடத்தை பிடித்துள்ளது.