விளையாட்டு

2nd ODI: ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு விட்டுக்கொடுத்த பின்ச்; இந்தியா உற்சாகம்

Summary:

2nd odi india batting first

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இரண்டு போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது.

உலக கோப்பைக்கு முன்பு நடைபெறும் ஒருநாள் தொடர் இதுதான் என்பதால் ஒவ்வொரு இந்திய வீரர்களும் தங்களது திறமையை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த தொடரில் அவர்களது திறமையை பொறுத்தே உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார்களா என தீர்மானிக்கப்படும். எனவே அனைவரும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் இந்திய வீரர்களை சமாளிப்பதற்கு ஆஸ்திரேலிய அணி கடினமாக உழைக்க வேண்டி உள்ளது.

முதல் போட்டியில் ஆடாத துவக்க ஆட்டக்காரர்கள் இந்தப்போட்டியில் நிச்சயம் தங்களது திறமையை வெளிப்படுத்தியே தீர வேண்டும். பந்துவீச்சாளர்களை பொருத்தவரை இந்திய அணிக்கு சமி முழு உடல் தகுதியுடன் இருப்பது மிகுந்த பலத்தை அளிக்கிறது.

இப்படி முழு பலத்துடன் இருக்கும் இந்திய அணியை இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்று தொடரை சமன் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் ஆஸ்திரேலிய அணியில் லயன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வது தான் சிறந்தது என பிட்ச் ரிப்போர்ட்டர் கவாஸ்கர் தெரிவித்தார். ஆனாலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய கோலி நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம் என தெரிவித்தார்.

 


Advertisement