இந்தவருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடும் ப்ளேயிங் 11...! துவக்க வீரர்கள் யாருன்னு பார்த்தீங்களா.!!2022 csk playing 11

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ளது. வழக்கம் போல நடப்பு சாமியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது தான் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. அதற்க்கு முக்கிய காரணம் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக கூட இது இருக்கலாம் என்பதால் சென்னை அணி கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்த ஐபிஎல் சீசனில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இதற்காக சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் உத்தேச 11 வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னை அணியில், தோனி, ருதுராஜ் கெய்க்வாட், டிவோன் கான்வே, ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ராஜ்வர்தன் ஹர்கர்கேகர், முகமது ஆஷிப், ஆடம் மில்னே ஆகியோர் ப்ளேயிங் 11 -ல் உள்ளனர்.

அணியின் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டிவோன் கான்வே இருப்பார்கள் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அடுத்தடுத்த இடங்களில் ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி ஆகியோர் களமிறங்க உள்ளனர்.