ஐயப்பன் கோவில் விவகாரம்!. உச்சநீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு!.

ஐயப்பன் கோவில் விவகாரம்!. உச்சநீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு!.


supreme-court-judgement-for-aiyappan-temple

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்திய அரசியலமைப்பு பிரிவு 25 மற்றும் 26 ஆகியவற்றுக்கு எதிராக இந்தத் தடை உள்ளது என மனுதாரர்கள் கூறியிருந்தனர்.

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

ayappan templeபெண்கள் கோயிலுக்குள் நுழைய எதிராக வாதிட்டவர்கள் இது நீண்ட காலமாக உள்ள நடைமுறை என்பதால், காலம் காலமாக தொடரும் மத நம்பிக்கை என்ற அடிப்படியில் அரசியலைப்பின் பிரிவு 25(1)இன் கீழ் இவற்றை மற்ற முடியாது என்று கூறியிருந்தனர்.

நீதிபதி தீபக் மிஸ்ரா, கன்வில்கர் கூறிய தீர்ப்பில்ஆண்களும், பெண்களும் சம அளவில் நடத்தப்பட வேண்டும். பெண்களை கடவுளாக மதிக்கும் நம் நாட்டில் அவர்களை பலவீனமாக நடத்தப்படக்கூடாது. எனவே கோவில்களில் அவர்கள் வழிபடுவதற்கு பாகுபாடு காட்டக்கூடாது" என தெரிவித்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு தாங்கள் ஆதரவாக உள்ளதாகவே கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.