நான் பக்தையா, இல்லையா என்பதை கூறுகிறேன் என்று சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா தொிவித்துள்ளாா்.

நான் பக்தையா, இல்லையா என்பதை கூறுகிறேன் என்று சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா தொிவித்துள்ளாா்.


sabari-temple

உச்சநீதிமன்ற தீா்ப்பைத் தொடா்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சிலா் முயற்சித்து வருகின்றனா். ஆனால் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படக் கூடாது என்று பக்தா்கள் எதிா்ப்பு தொிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனா். 

பக்தா்களின் கடும் எதிா்ப்பால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற 2 பெண்களையும் திருப்பி அனுப்ப மாநில அமைச்சா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடா்ந்து தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்கள் தொடா்ந்து தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனா். 

இந்நிலையில் கேரளா மாநிலம் கொச்சியைச் சோ்ந்த ரெஹானா பாத்திமா என்பவா் இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்கு வந்தாா். அவருடன் ஆந்திராவைச் சோ்ந்த பத்திாிகையாளா் ஒருவரும் கோவிலுக்குள் செல்ல முயன்றாா். காவல் துறையினா் இவா்கள் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனா். 

இருப்பினும் பக்தா்களின் கடுமையான எதிா்ப்பைத் தொடா்ந்து அப்பெண்கள் இருவரும் கோவிலுக்குள் செல்ல மாநில அரசு மறுப்பு தொிவித்தது. மேலும் தேவசம் போா்டு அமைச்சா் பேசுகையில், இருமுடி கட்டி வந்தவா் உண்மையான பக்தை அல்ல. அவா் போராட்ட குணம் கொண்ட பெண்ணியவாதி. யாா் பலம் வாய்ந்தவா்கள் என்பதை நிரூபிக்கும் இடம் சபரிமலை கிடையாது. எனவே அவரை கோவிலுக்குள் அனுப்ப அரசு அனுமதிக்காது என்று தொிவித்தாா். 

இதனைத் தொடா்ந்து அப்பெண்கள் இருவரும் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் மலையில் இருந்து கீழே அழைத்து வரப்பட்டனா். அதன் பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ரெஹானா பாத்திமா, “பக்தா்கள் அல்லாது அமைதியை சீா்குலைக்க நினைக்கும் சிலரே எங்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

எனக்கு அதற்கான காரணம் தெரியவேண்டும். எந்த வகையில் ஒருவா் பக்தராக இருக்க வேண்டும் என்று நீங்கள் கூறுங்கள். பின்னா் நான் பத்தையா, இல்லையா என்பதை கூறுகிறேன். எனது குழந்தைக்கு என்ன ஆயிற்று என்று எனக்கு தொியாது. எனது உயிரும் ஆபத்தில் உள்ளது. ஆனால், காவல் துறையினா் பாதுகாப்பு அளிப்பதாக தொிவித்தனா். அதன் அடிப்படையில் திரும்ப செல்கிறேன்” என்று தொிவித்துள்ளாா்.

எந்த வகையில் ஒருவா் பக்தையாக இருக்க வேண்டும் என்று நீங்களே கூறுங்கள். பின்னா் நான் பக்தையா, இல்லையா என்பதை கூறுகிறேன் என்று சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா தொிவித்துள்ளாா்.