பல ஆண்களுடன் தகாத உறவு, படுக்கையில் உல்லாசம், நேரில் கண்ட கணவரால் நேர்ந்த திடுக்கிடும் சம்பவங்கள்.!

பல ஆண்களுடன் தகாத உறவு, படுக்கையில் உல்லாசம், நேரில் கண்ட கணவரால் நேர்ந்த திடுக்கிடும் சம்பவங்கள்.!


wife-killed-husband-by-illegal-relationship-7M47CA

பல ஆண்களுடன் கொண்ட தகாத உறவால் பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்த தனது கணவனை கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுதா. இவர் பல ஆண்களுடன் தவறான முறையில் பழகி வந்துள்ளார்.இதனை அவரது சகோதரர் ரவி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதா கூலிப்படையினர் மூலம் தனது  சகோதரரை கொலை செய்ய முயன்றுள்ளார்.
அந்த கும்பலிடமிருந்து தப்பி வந்த ரவி,இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் தனது தங்கை தவறான வழியில் செல்வதாகவும், அதை கண்டித்ததால் தன்னை ஆன்லின் சிபு என்பவரின் மூலம்  செய்ய முயன்றதாகவும் கூறியுள்ளார். மேலும் ஆன்லின் சிபுவுடன் தனது தங்கைக்கு தகாத பழக்கம் ஏற்பட்ட பின்புதான் அவரது கணவர் ராஜசேகரை காணவில்லை என்றும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து  காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்  

 ராஜசேகர் மற்றும்  சுதா ஆகிய இருவரும் கடந்த 2002 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்.மேலும்  வெளிநாட்டில் கட்டிட வேலை செய்து வந்த ராஜசேகர் ஊருக்கு வந்திருந்த போது  ராஜசேகரை அவரது மனைவி சுதா மற்றும் அவரது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் கொலை செய்யப்பட்ட ராஜசேகரின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக்டேங்க்கில் வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் வழக்குபதிவு செய்து சுதாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

illegal affairs

அப்பொழுது , சுதா நானும், ராஜசேகரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு ராஜசேகரின் நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். இதில் பள்ளியாடியைச் சேர்ந்த ஆன்லின் சிபுவும் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

மேலும் நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். இந்நிலையில் ஆன்லின் சிபுவுடன் நான், நெருக்கமாக உல்லாசமாக இருந்ததை எனது கணவர் நேரில் பார்த்துவிட்டார்,மேலும் இதுகுறித்து கண்டித்தார். 

அதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து  மதுவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தோம். பின்னர் அரிவாளால் வெட்டியதுடன், தலையணையால் தலையில் அமுக்கி கொன்றோம்.

பின்னர் அவர் இருந்தபின் உடலை  வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக் டேங்க்கில் வீசிவிட்டோம்.பின்னர் அவரை தேடியவர்களிடம் அவர் வெளிநாடு சென்று விட்டதாக கூறி நாடகமாடினேன் என கூறியுள்ளார்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.