
பெண்களுக்கு செக்ஸ் குறைபாடு ஏற்படுமா?.. ஜி-ஸ்பார்ட் என்றால் என்ன?.. தம்பதிகளே கொண்டாடுங்கள்.!
இன்றளவில் பல்வேறு பாலியல் கேள்விகள் நம்மிடையே எழுகின்றன. அது குறித்து தெரிந்துகொள்வது அவசியம். பெண்களுக்கு செக்ஸ் குறைபாடு ஏற்படுமா? என்ற கேள்விக்கு பாலியல் மருத்துவர் காமராஜ் அளித்துள்ள பதில்களாவது;
ஆண்மை குறைபாடை போலவே பெண்களுக்கும் பெண்மை குறைபாடு ஏற்படுகிறது. ஆனால், இதனை பெரும்பாலான பெண்கள் வெளிப்படுத்துவதும் இல்லை, பெரிதுபடுத்துவதும் இல்லை. பெண்களிடையே தாம்பத்திய உணர்வின் குறைபாடு, உச்சகட்டம் (Orgasm) தொடர்பான உணர்வு குறைவாக இருத்தல், உச்சக்கட்டம் ஏற்படாமல் இருத்தல் போன்ற பிரச்சனைகள் உண்டு.
இதனை தனது துணையிடம் பெண்கள் சொல்ல தயங்குவதாலும், ஆண்களின் செயல்பாட்டிற்கு இசைந்து கொடுப்பதாலும் அவை பெரிதாக வெளிப்படுத்தும் இல்லை. ஆனால், நல்லதொரு கணவர் தனது ஆசையை தீர்ப்பதை போல, தனது மனைவியின் ஆசையையும் தீர்க்க உதவ வேண்டும். பெண்கள் என்றாலே கால்களை அகல விரித்து, ஆணின் இசைவுக்கேற்ப பிறப்புறுப்பை காட்டினால் அவனின் ஆசை தீர்ந்துவிடும்.
ஆனால், பெண்களுக்கு அவர்களின் உச்சக்கட்டம் ஏற்பட மனதின் மகிழ்ச்சி, தாம்பத்திய உணர்வின் உச்சக்கட்டம், ஆணின் புரிதல், அவனின் ஆசையை தூண்டும் செயல்பாடு என பல்வேறு விஷயங்கள் உள்ளன. அதனை உணர்ந்து செயல்பட வேண்டும். இதனை அறியாமல் இருக்கும் ஆனால் பெண்ணுக்கு உச்சக்கட்டம் ஏற்படாது என்றாலும், அவர்களுக்கு Sexual Addiction, Sex Arousm Disorder, Dyspareunia போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் பெரிதாக எடுப்பதில்லை. இதே நிலை தொடர்ந்தால் மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்வது நல்லது.
பெண்களுக்கு ஜி-ஸ்பார்ட் எனப்படும் இன்பம் தரும் இடங்கள் உள்ளன. ஆண்களை போலவே பெண்களின் உடல் முழுதும் இன்பம் நிறைந்துள்ளன. அதிகபட்சமாக உதடுகள், நாக்குகள், காது மடல், நெற்றி, மார்பு, மார்பக காம்பு, தொப்புள், தொடை, பிறப்புறுப்பு, பெருவிரல் போன்றவற்றையும் கூறலாம். இதனைப்போல, பெண்ணுறுப்பின் உள்ளே இருக்கும் ஜி-ஸ்பார்ட் மூலமாக பெண்களுக்கு தாம்பத்தியத்தின் போது நல்லதொரு ஆணின் துணையால் இன்பம் தூண்டப்படும். உச்சக்கட்டம் கிடைக்கும்.
Advertisement
Advertisement