டீன் ஏஜ் ஆர்வத்தால் வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள்.!

டீன் ஏஜ் ஆர்வத்தால் வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள்.!



Minor Girl Loss about Teenage Sexual Life Interest Wrong Destination

திருமணத்திற்கு பின்னர் பாலுறவு என்பது கலாச்சாரமாக நமது நாட்டில் இருந்து வரும் நிலையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக அவைகளில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ பருவத்தில் இருந்தே பாலுறவு தொடர்பான உரையாடல் தொடங்கி, பதின்ம வயதில் பாலுறவு கொள்வதில் தவறில்லை என்ற எண்ணம் இளம் தலைமுறையிடையே அதிகரித்து இருக்கிறது. 

17 வயதுக்கு முன்பு சிறுமிகள் டேட்டிங் வைத்துக்கொண்டு, மாதவிடாயை தள்ளிப்போடும் மாத்திரைகளை எடுக்கொள்ளும் சூழலும், கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் நிகழ்வுகளும் வெகுவாக அதிகரித்துள்ளன. பதின்ம வயதில் ஏற்படும் ஈர்ப்பை யோசனை செய்யாமல், பாலுறவு மீதான வேட்கையால் பெரியவர்களின் ஆலோசனையையும் கேட்காமல் செய்யும் செயலால், முறையற்ற கருக்கலைப்பு பிரச்சனைகளும் நடக்கிறது.

18 plus

திருமண பந்தத்திற்கு பின்னர் குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் போது, பதின்ம வயதில் செய்த தவறுகளால் கரு உருவாக இயலாத சிக்கலும் ஏற்படுகிறது. மேலும், அவ்வாறே கரு உருவாகினாலும் உடற்குறைபாடு, மூளைவளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்கின்றன. உடலுறவுக்கு பின்னர் குழந்தை உருவாகாமல் தடுக்க இளம் தலைமுறை திட்டமிட்டு வரும் நிலையில், அவர்கள் எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரை, மாதவிடாய் தள்ளிப்போகும் மாத்திரை எதிர்வினையாற்றுகிறது என்பது அவர்களுக்கு தெரிவது இல்லை.

பதின்ம வயது வந்ததும் ஆண் - பெண்ணின் உடல் மறுஉற்பத்திற்கு தயாராகிவிடும் நிலையில், அவை பருவமடைதல் வழியாக உறுதி செய்யப்படுகிறது. பருவமடையும் போது ஹார்மோன் சுரப்பும் நிகழ்ந்து, ஹார்மோனின் செயல்பட்டால் காதல் உணர்வு ஏற்படுகிறது. காதல் உணர்வு ஏற்படவில்லை என்றால் தான் பருவ வயதில் பிரச்சனை. ஆனால், பாலியல் ரீதியாக ஏற்படும் பருவ உணர்வை இளம் தலைமுறை தவறாக செயல்படுத்தி வருகிறது.

18 plus

திருமணத்திற்கு முந்தைய பாலுறவால் ஏற்படும் எதிர்கால விளைவுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமும் தேவையாகிறது. ஆர்வத்தில் உடலுறவு மேற்கொண்டு கர்ப்பம் ஏற்பட்டு பெண் குழந்தையின் வாழ்க்கை சீரழிக்கப்டுகிறது. கர்ப்பத்தை வெளியே சொல்லாமல் கருக்கலைப்பு செய்த பின்னர், பெண்கள் உடல்ரீதியாக பல பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். மன ரீதியாகவும் பிரச்சனையை சந்திக்கின்றனர். பதின்ம வயதில் செய்யும் பாலுறவால் ஏற்படும் பிரச்சனை குறித்து தகவலை தெரிய குடும்பம், பள்ளிகள் வாய்ப்பை ஏற்படுத்தி விளக்க வேண்டும்.

பதின்ம வயதில் ஏற்படும் எதிர்பாலின ஈர்ப்பு, முறையற்ற ஈர்ப்பு, போதை பழக்கம் போன்றவற்றுக்கு வாய்பளிக்காமல் பார்த்துக்கொள்ளும் தலையாய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. காமம் என்ற இன்பத்தை அனுபவிக்க நடப்பு வயது சரியானது இல்லை என்பதை உணர்த்தி புரிய வைக்க வேண்டும்.