லைப் ஸ்டைல் காதல் – உறவுகள்

கள்ளக்காதலை கண்டித்த காதலியின் கணவரை கம்பியால் அடித்து கொலை செய்த கார் டிரைவர்

Summary:

man killed his lover's husband

குருகிராமில் பக்கத்து வீட்டில் தங்கியிருந்த கள்ளக்காதலியின் கணவரை கார் ஓட்டுநர் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிகண்டர்பூர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான ரமேஷ் யாதவ் என்பவர் ஹரியானாவில் ஒரு கால்நடை மருத்துவருக்கு கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் குருகிராமில் ஒரு அப்பார்ட்மெண்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார் ஆசிரியையான இவரது மனைவி ஹரியானாவில் வேறொரு பகுதியில் பணியாற்றி வருகிறார்.

illegal affair க்கான பட முடிவு

இந்நிலையில் தனியாக தங்கியிருந்த ரமேஷ் யாதவிற்கும் பக்கத்து வீட்டில் தங்கியிருந்த விக்ரம் யாதவின் மனைவி கீதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 2007 ஆம் ஆண்டு திருமணமான விக்ரம் யாதவ், கீதா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த கள்ளகாதலை அறிந்த விக்ரம் யாதவ் மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் குமார் ஆகிய இருவரும் கீதா மற்றும் ரமேஷ் யாதவை கண்டித்துள்ளனர். எத்தனையோ முறை முயற்சித்தும் அவர்கள் இந்த கள்ளக்காதலை கைவிடுவதாக இல்லை. 

murder with iron rod க்கான பட முடிவு

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கீதாவின் வீட்டிற்கு வந்த ரமேஷ் யாதவ் அங்கிருந்த அவரது கணவர் விக்ரமை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். தலையில் பலமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த விக்ரமை அருகில் இருந்தவர்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி அன்று இரவே இறந்துவிட்டார். 

இதனை தொடர்ந்து விக்ரமின் சகோதரர் ரமேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்தார் ரமேஷ் யாதவை போலீசார் கைது செய்தனர் மற்றும் அவர் கொலை செய்ய பயன்படுத்திய இரும்புக்கம்பியை கைப்பற்றியுள்ளனர்.


Advertisement