பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் சிறுமிகள்.. எடுக்க வேண்டிய முடிவு என்ன?..!

பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் சிறுமிகள்.. எடுக்க வேண்டிய முடிவு என்ன?..!



if-you-are-sexually-abused-or-tortured-should-follow-ti-QB7FLY

பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியில் பெரும் கொடூரமாக இருப்பது, அவர்களுக்கு எதிராக நிகழும் பாலியல் ரீதியான வன்முறை. பெண் பிள்ளைகளாக பிறந்ததை தவிர்த்து, வேறேதும் தவறுகள் செய்யாத பல இளகிய குணம் கொண்ட பெண்கள் கயவர்களின் காம இச்சையால் தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் சூறையாடப்படும் சோகம் நடந்து வருகிறது. இவற்றில் வயது பேதமனின்றி பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். 

பச்சிளம் சிறுமிகள், பள்ளிக்கு சென்று வரும் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், திருமணம் முடிந்த பெண்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்படுத்தப்படுகிறது. உடன் பழகிய நண்பர்கள், உறவினர்கள், பள்ளி ஆசிரியர்கள் என எந்த உறவையும் நம்ப இயலாமல் பல துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில இடங்களில் சொந்த தாயே தனது மகளின் வாழ்க்கையை சீரழிக்க உதவிய கொடூரம் நடந்து வருகிறது. 

sexual abuse

இவைகளுக்கு தீர்வு இல்லையா? என்று கேட்டால் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற துயரங்கள் குறையாது. அவ்வாறு சட்டம் கடுமையாக்கப்பட்டாலும் 30 % மட்டுமே குற்றம் குறையும். ஒவ்வொரு தனிமனிதனினும் பெண்களை தனது உடன்பிறவா சகோதரியாக பார்க்க வேண்டும். சுய ஒழுக்கத்தை ஒவ்வொரு நபரும் கடைபிடிக்க வேண்டும். பெண் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் தோழர்களாகவும் பழக வேண்டும். எந்த பிரச்சனை என்றாலும் எங்களிடம் கூறினால் உரிய தீர்வு காண்போம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்க வேண்டும். 

இன்றுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு சாதகமாக சில சட்டங்கள் உள்ளன. அவைகள் மூலமாக கயவர்களை தூக்கு கயிறில் ஏற்ற வழியில்லை என்றாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக்கொடுக்க முடியும். குழந்தைகள் நல அமைப்புகள் இன்றளவில் அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. அவை வழியாக தண்டனை பெற்றுத்தர முடியும். 

sexual abuse

பெண்கள் மனதளவில் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். துயரத்தின் தாக்கத்தில் இருந்து மீளாத வகையில் தான் அக்கொடூரம் நடைபெறும் என்பது நிதர்சனம் என்றாலும், வாழ்வியலில் அதனை மறந்து வெளியேற முயற்சிக்க வேண்டும். மீண்டும் இப்படியொரு துயரம் மற்ற பெண்களுக்கு நிகழாமல் அல்லது நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இங்கு பாசம் காண்பிக்கப்பட்ட பல பெண்கள் சீரழிக்கப்படுகிறார்கள். அதனால் பாசம் வைத்த நபர் செய்த கொடூரத்தின் எச்சம் அவர்களின் ஆழ்மனதில் பதிந்துவிடுவதால், துயரம் அவர்களை பெரும் துயர முயிடவுகளை எடுக்க வழிவகை செய்து விடுகிறது. 

எவனாயினும் தவறு செய்தவனுக்கு கட்டாயம் தண்டனை உண்டு. அதற்காக விலைமதிப்பற்ற உயிரை இழக்க வேண்டாம். ஆணொருவன் தன்னை அவமதித்தவன் முன்னிலையில் கெத்தாக வாழ்கிறேன் என்று உயர போராடுவதாக தெரிவிப்பான். அதனைப்போலத்தான்., உங்களுக்கு நடந்த துயரத்தில் இருந்து மீண்டெழுந்து, உங்களுக்கு துரோகம் செய்து துயரத்தை ஏற்படுத்தியவன் முன்னிலையில் நல்ல நிலையில் வாழ்ந்து அவனை தோற்கடியுங்கள். அந்த துயரம் நீங்கள் பாதிக்கப்பட்ட நாளில் அனுபவித்த துயரத்தை விட அதிக வலியை கொடுக்கும். அந்த வலியே அவனுக்கு மரணத்திற்கு ஈடானது. நல்லதே நினையுங்கள், நல்லதே செய்யுங்கள். காலம் கர்ம வினையுடன் அவனவன் செய்ததை அவனவனுக்கு காலம் வந்ததும் திருப்பி கொடுக்கும்.

பாசத்தில் பார்வதி அன்னையாக இருங்கள், ஆபத்து என்றால் பத்ரகாளியாக மாறுங்கள். 

Be Bold & Strong.. Karma is Great Boomerang in World.