இளஞ்சோடிகள் மர்ம மரணம்; பிறந்தநாளில் நடந்தது என்ன, போலீஸ் விசாரணை

இளஞ்சோடிகள் மர்ம மரணம்; பிறந்தநாளில் நடந்தது என்ன, போலீஸ் விசாரணை


husband and wife dead

மீஞ்சூர் அருகே கேசவபுரத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ். இவர் தனலட்சுமி என்ற பெண்ணை உயிருக்குயிராக காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார். வெங்கடேஷ், எண்ணூரில் ஒரு தனியார்  நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

வெங்கடேசுக்கு நேற்று பிறந்தநாளாம். அதை கணவன், மனைவி இருவரும்  சேர்ந்து கொண்டாடியுள்ளனர். அதற்காக வாங்கப்பட்ட கேக்-கும் வீட்டில் இருந்தது.

இந்நிலையில் வெங்கடேஷின் வீட்டு கதவு மூடியே இருந்தது. நீண்ட நேரமாகியும் வீட்டினுள் இருந்து யாரும் வெளியே வரவும் இல்லை, கதவு திறக்கப்படவும் இல்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தனர். அப்போது வெங்கடேஷ் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். தனலட்சுமியோ தன் படுக்கையில் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார். ஒரே அறைக்குள் இருவரும் இறந்துகிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலைகள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வீடு முழுக்க ஏதாவது தகவல்கள், ஆதாயங்கள் கிடைக்குமா என ஆராய்ந்தனர். அப்போது ஒரு கடிதம் கிடைத்தது. அதில் தங்கள் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. அது தனலட்சுமி தன் கைப்பட எழுதிய கடிதம் என கூறப்படுகிறது. என்றாலும் இளஞ்சோடிகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.