இந்தியா காதல் – உறவுகள்

28 வயது இளம்பெண்ணை மணந்த 70 வயது தாத்தா! முதலிரவில் காத்திருந்த பெரும் சோகம்.!

Summary:

girl cheating 70 year old husband for money

பஞ்சாப் மாநிலம் சர்கோதா பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தப்பா. 70  வயது நிறைந்த இவர் சமீபத்தில் நஜ்மா என்ற 28 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார் .

மேலும் திருமணத்திற்காக முஸ்தப்பா, நஜ்மாவிற்கு 70000 ரூபாய் பணம் மற்றும் தனது முதல் மனைவியின் அனைத்து  நகைகளையும் கொடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், அன்றிரவு திருமண ஜோடிக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

oldman marry young girl க்கான பட முடிவு

பின்னர் முதலிரவின்போது  நஜ்மா பாலில் மயக்க மருந்து கலந்து முஸ்தப்பாவிற்கு கொடுத்துள்ளார். இதனை குடித்த முஸ்தப்பா மயங்கி விழுந்துள்ளார். பின்னர் நஜ்மா வீட்டில் இருந்த பணம், நகை மற்றும் அனைத்து விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக  தப்பியுள்ளார்.

இந்நிலையில் மறுநாள் மயக்கம் தெளிந்து எழுந்த முஸ்தப்பா வீட்டில் உள்ள அனைத்தையும்  நஜ்மா திருடி சென்றதையும், அதனால்தான் தன்னை திருமணம் செய்து கொண்டார் என்பதையும் அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தார் 

பின்னர் இதுகுறித்து போலீசாரிடம் முஸ்தப்பா புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார் அந்த பெண்ணை மற்றும் அவருடைய  கும்பலை தீவிரமாக தேடி வருகிறது.


 


Advertisement