கமலின் பிரச்சாரக் கூட்டத்தில் பெண் செய்த வேலை..! பிரச்சாரக் கூட்டத்தில் பரபரப்பு.!

கமலின் பிரச்சாரக் கூட்டத்தில் பெண் செய்த வேலை..! பிரச்சாரக் கூட்டத்தில் பரபரப்பு.!



women through on kamal

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பல்வேறு இடங்களில்  தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ஏழ்மையை அரசியல் கட்சிகள் பேணி பாதுகாத்து வருகின்றன. அதனால் தான் ஏழ்மை மீது எனக்கு கோபம் ஏற்படுகிறது. நேர்மை பசிபோல் இருக்க வேண்டும். நாள்தோறும் நேர்மையாக இருக்க வேண்டும். 

kamal

நான் உதயநிதி தயாரிப்பில் படம் நடித்துள்ளேன். அதற்காக நான் ஊழல் செய்து விடுவேனா? தமிழில் வசனம் எழுத ஆள் இல்லை, அதனால் வட நாட்டிலிருந்து தேர்தல் வெற்றிக்கு ஒரு ஆள் அழைத்துவரப்பட்டுள்ளார் என தெரிவித்தார். மேலும், லேடியா? மோடியா? என ஜெயலலிதா கேட்டார். நான் கேட்கிறேன் மோடியா? இந்த தாடியா? மத்திய அரசை துணிச்சலோடு கேள்வி கேட்க ஆள் வேண்டும். 

என்னை பீ டீம் என சித்தரித்துள்ளது திமுக. ஆனால் திமுக வெற்றிபெற்றால் மத்திய அரசுக்கு கைகட்டி வேலை பார்ப்பார்கள் என பேசினார். கமல் பேசி முடித்ததும் கூட்டத்திலிருந்த பெண் ஒருவர் கூச்சலிட்டபடி கையில் இருந்த புத்தகங்களை கமலை நோக்கி தூக்கி வீசினார். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்தவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.