அதிர்ச்சியில் விஜய்...ரூ.300 கோடி மோசடி செய்த குற்றவாளியை தவெகவில் இணைத்த செங்கோட்டையன்! பெரும் பரபரப்பு....!!!



winstar-sivakumar-joined-tvk-controversy

சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வின்ஸ்டார் சிவக்குமார், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் தொடர்புடையவராக கூறப்படும் அவர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இணைக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து சமூக வலைத்தளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

300 கோடி ரூபாய் மோசடி புகார்

சேலத்தைச் சேர்ந்த வின்ஸ்டார் சிவக்குமார், ‘Winstar India City Developers’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் மூலம் நிலம் மற்றும் முதலீடு வழங்கப்படும் எனக் கூறி, சுமார் 3,000 பேரிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தகவலின்படி, சுமார் 300 கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாக காவல்துறை தரப்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதுடன், வின்ஸ்டார் சிவக்குமார் தேடப்பட்டு வரும் குற்றவாளி பட்டியலிலும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரின் அரசியல் இணைப்பு கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரொம்ப அநீயாயம்... தவெக பற்றி பேசினால் இப்படிதான் பண்ணுவீங்களா? முட்டைகளை வீசி தாக்குதலால் விஜய்யிடம் நீதி கேட்ட திருநங்கை! பரபரப்பு வீடியோ!

தவெக இணைப்பு ஏற்படுத்திய அதிருப்தி

இந்த சூழ்நிலையில், தவெக-வின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான KAS முன்னிலையில் சிவக்குமார் கட்சியில் இணைக்கப்பட்டார். பெரும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக X தளத்தில், அவருக்கு எதிரான வழக்குகள் மற்றும் போலீஸ் தகவல்கள் தொடர்பான பதிவுகள் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

விஜய் அதிருப்தி அடைந்ததாக தகவல்

கட்சியின் இமேஜை பாதிக்கும் வகையில் இந்த விவகாரம் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தவெக தலைவர் விஜய் இந்த விவகாரம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கட்சியின் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக உள்மட்ட விசாரணை நடத்தப்பட்டு, தேவையானால் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

இதையும் படிங்க: தவெக மகளிர் அணி கள்ளக்காதலை ஆதரிக்கிறதா? பெண் ஒருவர் நறுக்குன்னு சொன்ன பதில்....வைரலாகும் வீடியோ!!!