வேற லெவல்...கொண்டாட்டத்தில் நேரு ஸ்டேடியம்! விஜய் பதவியேற்பு விழாவிற்கு அம்மாவுடன் மாஸ் எண்ட்ரி கொடுத்த த்ரிஷா.... போலீஸ் குவிப்பு!!!



vijay-swearing-in-ceremony-nehru-stadium

சென்னை நேரு ஸ்டேடியத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வை காண ரசிகர்கள் காலை முதலே திரளாக குவிந்துள்ளனர். தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படும் இந்த விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

விஜய்யின் குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும் விழாவில் பங்கேற்க வந்துள்ளனர். மேலும், அவரது திரைப்பயணத்தில் முக்கிய பங்கு வகித்த முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கும் சிறப்பு அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திக் திக் நிமிடங்கள்....ஆளுநர் மாளிகையில் தெரியப்போகும் 3 மணி க்ளைமாக்ஸ்! விஜய்யின் கையில் இருக்கும் அந்த 'ரகசிய' கடிதம்.! நேரு ஸ்டேடியத்தில் தீவிர ஏற்பாடுகள்....!!!

த்ரிஷா வருகை குறித்து தகவல்

நடிகை த்ரிஷா தனது தாயார் உமா கிருஷ்ணனுடன் விழாவில் நேரில் பங்கேற்று விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

திரையுலக நட்புகளை அரசியல் மேடையிலும் விஜய் தொடர்கிறார் என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் கூட்டம்… பலத்த போலீஸ் பாதுகாப்பு

தங்களின் அபிமான நடிகர் அரசியல் தலைவராகப் பொறுப்பேற்கும் தருணத்தை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் சென்னை வந்துள்ளனர். இதனால் நேரு ஸ்டேடியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தகவலின்படி, சுமார் 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய நுழைவுவாயில்கள், வாகன நிறுத்தங்கள் மற்றும் மேடை பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசியலில் புதிய கட்டம்

நடிகராக தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய விஜய், தற்போது அரசியல் தலைவராக புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த பதவியேற்பு விழா தமிழக அரசியலில் அடுத்த கட்ட மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.

 

இதையும் படிங்க: போடு வெடிய... நாளை CM விஜய்யுடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்பு...? ஒட்டுமொத்த தமிழகமே உற்சாகத்தில்...!!!