BREAKING: வேற லெவல் வெற்றி.... இனி அசைக்க கூட முடியாது! தமிழகத்தை ஆளப்போகும் தளபதி விஜய்! 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் கம்பீரமாகத் தொடரும் தவெக ஆட்சி..!!!
தமிழக அரசியலில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த பரபரப்புக்கு இன்று சட்டப்பேரவையில் முடிவு கிடைத்தது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் மிகப்பெரிய ஆதரவை பெற்று தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. 144 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில், எதிர்ப்பு தரப்புக்கு வெறும் 22 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
144 வாக்குகளுடன் பெரும்பான்மை நிரூபித்த அரசு
சென்னையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 144 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பேர் எதிராக வாக்களித்தனர். மேலும் 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் தவெக அரசு தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தொடரும் நிலை உறுதியாகியுள்ளது. வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் ஆளும் தரப்பினர் சட்டப்பேரவையிலேயே உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: இரட்டை சவால்.... இடையில் சிக்கி தவிக்கும் விஜய்! ஸ்டாலின் திட்டம் போட்டு நகர்த்தும் காய்...5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் போராட்டம்!!!
ஒருவார அரசியல் பரபரப்புக்கு முடிவு
கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் பல்வேறு அரசியல் நகர்வுகள் தீவிரமாக பேசப்பட்டு வந்தன. ஆட்சிக்கு எதிராக பல தரப்பில் விமர்சனங்களும், அரசியல் கணக்குகளும் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற வாக்கெடுப்பு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் வகுத்திருந்த அரசியல் வியூகங்கள் பலவும் செயலிழந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது. குறிப்பாக 144 என்ற பெரிய எண்ணிக்கையிலான ஆதரவு, ஆளும் தரப்புக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
தமிழக அரசியலில் புதிய பலம்
இந்த வெற்றியின் மூலம் தமிழக அரசியலில் தவெக தனது நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. புதிய ஆட்சியாக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற மிக முக்கியமான அரசியல் சோதனையை விஜய் அரசு வெற்றிகரமாக கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: BREAKING : அடி தூள்.....விஜய்யுடன் கையை கோர்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...! இனி கோட்டையை ஆளப்போவது தவெக தலைவர் விஜய் தான்!!!