திமுக கூட்டணியில் இருந்து 3 முக்கிய கட்சிகள் விலகல்.? அறிவாலயத்திலிருந்து கசிந்த தகவல்கள்.?!



vck and other 2 parties may leave dmk in 2026 election

தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கும் நிலையில் தமிழகத்தின் கட்சிகள் அனைத்தும் இப்போதே அதற்கான வியூகங்களை வகுக்க துவங்கியுள்ளன. மேலும், கூட்டணி குறித்த பேரங்கள் கூட பேச துவங்கி விட்டதாக தெரிகிறது. 

தற்போது திமுகவின் கூட்டணியில் விசிக, காங்கிரஸ், இரு இடதுசாரி கட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே திமுக மீதான அதிருப்தியை விசிக பல்வேறு இடங்களில் பதிவு செய்து வருகின்றது. இந்த முறை திமுகவுக்கு மிகுந்த கெடுபிடிவுடன் விசிக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Vck

அதிலும் கூடுதல் தொகுதிகளை திமுக ஒதுக்கினால் மட்டுமே விசிக கூட்டணியில் நீடிக்க முடிவெடுத்துள்ளதாம். ஏற்கனவே, சொந்த சின்னத்தில் போட்டியிடாமல் விசிக உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுகிறது. இந்த நிலையும் மாற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: நடிகர் விஜயால், ஸ்டாலினுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.. உற்சாகத்தில் உடன்பிறப்புக்கள்.!

திமுக பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இது இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். பரந்தூர் விமான நிலைய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு மேலே குறிப்பிட்ட 3 கட்சிகளும் திமுகவின் கூட்டணியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு.. விஜய் பிறப்பித்த அதிரடி ஆணை.!