"கருத்து கணிப்புகள் குறித்து கருத்து கூற முடியாது" வைகோ கூறிய பலே காரணம்

"கருத்து கணிப்புகள் குறித்து கருத்து கூற முடியாது" வைகோ கூறிய பலே காரணம்



Vaiko about exitpolls 2019

நாடு முழுவதும் இன்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என மதிமுக தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் 11 முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெறும் முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. 

vaiko

இந்த கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜக கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் என வெளியாகியுள்ளன. இதனால் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் மிகவும் கலக்கமடைந்துள்ளன. 

இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தமிழகத்தில் தேர்தலை சந்தித்த மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இந்த கருத்து கணிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். 

vaiko

ஏற்கனவே நிலுவையில் இருக்கும் வழக்கு ஒன்றில் ஆஜராக இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கருத்து கணிப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பல நேரங்களில் மாறுபட்டு இருக்கிறது. அதனால் இந்த கருத்துக் கணிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

மேலும் தேர்தல் முடிவுகளை பற்றி தெரிந்துகொள்ள இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.