BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்: நாளை ஆளுனர் மாளிகையில் பதவியேற்பு..!
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 14 ஆம் தேதி தமிழக அமைச்சராக பதவியேற்கிறார் என்று கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்ற ஆளுனர் டிசம்பர் 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
வரும் 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுனர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கவர்னர் மாளிகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்காக தனி அறை தயாராகி வருகிறது, இன்று இரவுக்குள் பணிகளை முடித்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.