ஆரம்பமே அட்டூழியமா.? பழைய அரசியல் பாதை தானா..... 3-வது நாளே சர்ச்சையில் சிக்கிய CM விஜய்! தேசிய அளவில் ட்ரெண்டாகும் #TVKFails ஹாஸ்டேக்..!!!
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே விஜய் தலைமையிலான அரசு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. குறிப்பாக, அவரது ஆஸ்தான ஜோதிடருக்கு முக்கிய அரசுப் பதவி வழங்கப்பட்டதாக வெளியான தகவலும், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏ-க்களுடன் நடைபெற்ற சந்திப்பும் அரசியல் வட்டாரத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாற்று அரசியலை முன்னிறுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த நிலையில், பழைய அரசியல் நடைமுறைகளே தொடரப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்து வருகின்றன. இதனால் ஆட்சியின் ஆரம்பகட்டத்திலேயே எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
இதையும் படிங்க: BREAKING : அடி தூள்.....விஜய்யுடன் கையை கோர்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...! இனி கோட்டையை ஆளப்போவது தவெக தலைவர் விஜய் தான்!!!
ஜோதிடர் நியமனம் குறித்து விமர்சனம்
விஜய்க்கு நெருக்கமானவராக கருதப்படும் ஆஸ்தான ஜோதிடருக்கு முக்கிய அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. அரசின் முக்கிய முடிவுகளில் தனிப்பட்ட நெருக்கம் முன்னிலைப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் மாற்று அரசியல் குறித்து விஜய் முன்வைத்த கருத்துகளையே மீண்டும் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதிமுக எம்எல்ஏ சந்திப்பு விவாதம்
அதேபோல், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள சில எம்எல்ஏ-க்களை விஜய் சந்தித்ததாக வெளியான தகவலும் புதிய அரசியல் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஆட்சியை வலுப்படுத்தும் முயற்சியா அல்லது எதிர்க்கட்சியில் குழப்பத்தை உருவாக்கும் நகர்வா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
இந்த விவகாரங்களின் பின்னணியில், #TVKFails என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. “மாற்று அரசியல் என பேசிய அரசு, ஆரம்பத்திலேயே பழைய அரசியல் பாதையில் செல்கிறது” என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
ஒருபுறம் மக்கள் மத்தியில் விஜய்க்கு ஆதரவு நீடித்து வரும் நிலையில், மறுபுறம் அரசியல் எதிர்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. ஆட்சியின் தொடக்கத்திலேயே உருவாகியுள்ள இந்த விமர்சனங்களை விஜய் அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது தற்போது அரசியல் வட்டாரத்தின் முக்கிய கவனமாக உள்ளது.
இதையும் படிங்க: BREAKING! விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு CM வழங்கிய அதிரடி அரசு பதவி.!!!