பனையூரில் விஜய் எடுத்த அதிரடி முடிவு! அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை! பரபரக்கும் அரசியல் களம்..!!!



tvk-mlas-resignation-letters-report

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்றுள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பனையூரில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களிடமும் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பனையூர் கூட்டத்தில் கையெழுத்து பெறப்பட்டதாக தகவல்

கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் பனையூரில் நடைபெற்றதாகவும், அதில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்களிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்த ஏற்பாடு கட்சியின் ஒழுக்கத்தை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நிம்மதி அளிக்காமல் வேதனை ஆக்குது தவெக அரசு! I6 மாத சாதனையில்... தமிழகமே 6 வருஷம் பின்னாடி போய்டுச்சு! முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த R.B. உதயகுமார்..!!!

சர்ச்சைகளில் சிக்கும் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கையா?

அரசுக்கும் கட்சியின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் மக்கள் பிரதிநிதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் பதவியைப் பறிக்கும் நடவடிக்கையை எளிதாக்க முடியும் எனக் கட்சித் தலைமை கருதுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், பொதுவெளியில் சர்ச்சைகளில் சிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கட்சித் தலைமை எச்சரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும், எம்எல்ஏக்களிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து பெறப்பட்டதாக வெளியான தகவல் குறித்து தவெக தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

 

இதையும் படிங்க: சீமானுக்கு ஸ்டாலின் சொன்ன சூசகமான பதில்! அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட்....!!!