அது எப்படி இப்போ வந்துச்சு...! முதலிரவில் மனைவியை சித்திரவதை செய்த கணவன்! கதறி அழுது வீடியோ வெளியிட்ட புதுமணப்பெண்...! பகீர் பின்னணி..!!!



newlywed-husband-misbehaviour-viral-video

திருமணமான முதல் நாளிலேயே மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டதால், கணவன் அவரிடம் தகராறு செய்து துன்புறுத்தியதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. மறுநாள் காலையில் அந்தப் பெண் தனது பெற்றோருக்கு அனுப்பிய வீடியோவும் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாதவிடாய் ஏற்பட்டதால் கணவன் ஆத்திரம் எனத் தகவல்

புதுமணத் தம்பதியினரின் திருமணச் சடங்குகள் முடிந்த நிலையில், திருமணமான முதல் நாள் இரவில் பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இது இயற்கையான உடல்ரீதியான நிகழ்வு என்பதைப் புரிந்துகொள்ளாமல் கணவன் கோபமடைந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிறந்தநாள் கொண்டாட்ட கேக்கில் முகத்தை அழுத்தியாதால் நடந்த அதிர்ச்சி...! துடித்துடித்த இளம்பெண்... ஷாக் வீடியோ..!!!

மேலும், போதையில் இருந்ததாகக் கூறப்படும் கணவன், மனைவியின் விருப்பத்திற்கு மாறாக நடந்துகொண்டு அவரைத் துன்புறுத்தியுள்ளார் .

பெற்றோருக்கு அனுப்பிய வீடியோ

மறுநாள் காலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அழுதபடி தனது நிலைமையை விளக்கி பெற்றோருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார் . அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதால், பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் எந்தப் பகுதியில், எப்போது நடந்தது என்பது குறித்த தெளிவான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.

 

இதையும் படிங்க: இது என்ன அதிசயமா இருக்கு... சேற்றில் சிக்கிய காரை தள்ளும் காளை மாடு..! வைரலாகும் ஷாக் வீடியோ..!!!