விஜய்க்கு எதிரான உதயநிதியின் பேச்சு - டிடிவி தினகரன் நிலைப்பாடு என்ன?.. 



TTV Dhinakaran Pressmeet about Udhayanidhi Stalin Speech Against Vijay 

 

சினிமா துறையில் இருந்து முன்னேறி வந்தவர்கள், அடித்துறையினரை இழிவுபடுத்துவதுபோல பேசுவது நல்லதல்ல என டிடிவி தினகரன் பேசினார்.

திருப்பூர் மாவட்டத்தில் தனது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், பரிசுகளை வழங்கினார்.

இதையும் படிங்க: #Breaking: "ஆதவ் அர்ஜுனனுக்கு அறிவில்லையா?" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்..! 

அதனைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து முடிந்து, அதன் வாயிலாக முதல்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

ttv dhinakaran

வாக்குறுதி என்னாச்சு?

முதல்வர் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இது வருந்தத்தக்க விஷயம். தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் இனி வரும் காலத்திலாவது நிறைவேற்ற வேண்டும்.

இரட்டை இலையை காட்டி பழனிச்சாமி மக்களை ஏமாற்ற முடியாது. இரட்டை இலை பலவீனமாக இருக்கிறது. திமுகவின் பீ-டீமாக செயல்படுபவர்கள், திமுக வெற்றிக்கு பாடம் புகட்ட காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சினிமாவில் இருந்து வந்தவர் தான். சினிமா செய்திகளையும் மக்கள் விரும்புகிறார்கள். சினிமா துறையில் இருந்துதானே அவர்களின் முன்னவர்களும் வந்தார்கள்" என பேசினார்.

இதையும் படிங்க: "ஊர்ந்து போய் பதவி பிடித்த கரப்பான் பூச்சி" - எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதிலடி.!