நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
உடைந்த ரகசியம்! தவெக விஜய் கட்சியின் சின்னம் இதுவா? ஆர்வத்தில் அரசியல் வட்டாரம்!
கரூர் சம்பவத்துக்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடு மந்தமானதாக விமர்சனங்கள் எழுந்திருந்தாலும், கட்சித் தலைவர் விஜய் அமைதியாக அடுத்த கட்ட அரசியல் முன்னேற்றம் நோக்கி நகர்ந்து வருகிறார். தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சியின் முக்கியமான நடவடிக்கை தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கட்சியின் அங்கீகாரம் குறித்து பேசுபொருள்
தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்ற செய்தி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கான காரணங்கள் வேறு என அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதே நேரத்தில், தேர்தல் நெருங்கி வருவதால் விஜய், தேர்தல் ஆணையத்தை நேரடியாக நாடியுள்ளார்.
இதையும் படிங்க: போடு வெடிய....சைலண்ட்டாகவே இருந்து சம்பவம் செய்த விஜய்! அதிர்ச்சியில் DMK, ADMK....
பொது சின்னத்திற்கான விண்ணப்ப நடைமுறை
தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொதுச் சின்னங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய புதிய தகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வாக்கு சதவீதம் உள்ளிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே கட்சிக்கு நிரந்தர சின்னம் வழங்கப்படும்.
திமுக, அதிமுக போன்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முறையே உதயசூரியன் மற்றும் இரட்டை இலை போன்ற நிரந்தர சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெற்றி கழகத்தின் சின்ன பட்டியல்
இந்த சூழலில், தமிழக வெற்றி கழகம் தனது சின்னங்களுக்கான பரிந்துரைப் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் விரும்பி சமர்ப்பித்த சின்னங்களின் பட்டியலில் விசில், கால்பந்து, பேட், வெற்றி கோப்பை, சிலிண்டர், லேப்டாப், பேனா நிப்பு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சியின் அங்கீகாரம் மற்றும் சின்னத் தேர்வு அரசியல் வட்டாரத்தில் புதிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் எவ்வாறு முடிவு செய்ய உள்ளது என்பது அரசியல் கணக்கில் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இவ்வுகளுக்காக இப்படியா! 2026 தேர்தலில் தவெக தலைவர் விஜய்யின் கட்சியின் சின்னம் இதுவா? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.!