நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
இவ்வுகளுக்காக இப்படியா! 2026 தேர்தலில் தவெக தலைவர் விஜய்யின் கட்சியின் சின்னம் இதுவா? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.!
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகமும் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறது.
விஜயின் அரசியல் நடவடிக்கைகள்
சமீபத்தில் கரூரில் நடந்த துயரச் சம்பவத்துக்குப் பிறகு பல்வேறு சட்டரீதிச் சிக்கல்களை அமைதியாக சமாளித்த விஜய், மீண்டும் தனது கட்சியை உறுதிப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜயின் நடவடிக்கை, கட்சியினருக்கு ஊக்கமளித்துள்ளது.
இதையும் படிங்க: செம குஷியில் விஜய்! தவெக கட்சியை வலுப்படுத்த TVK வில் கூண்டோடு வந்து ஐக்கியம் ஆன புதிய குழு!
வெற்றிக் கழகத்தின் தேர்தல் தயாரிப்பு
அடுத்தடுத்த கட்டமாக, 2026 தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் தனது சின்னத்திற்காக மத்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கத் தயாராகியுள்ளது. இதற்காக கட்சியினர் இன்று டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர். கட்சியின் அடையாள சின்னம் குறித்து ரசிகர்களும் ஆதரவாளர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
சின்னத் தேர்வில் பரபரப்பு
விஜய், இளைஞர்களையும் பெண்களையும் கவரும் வகையில் ஐந்து சின்னங்களைத் தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் ‘ஆட்டோ’ மற்றும் ‘விசில்’ சின்னங்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன என கட்சியினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் எந்த சின்னம் கட்சியின் அதிகாரப்பூர்வ அடையாளமாக அமையும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சின்னத் தேர்வு மூலம் தேர்தல் களத்துக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தல் வெற்றிக்கான தளத்தை உறுதியாக அமைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.