அரசியல் தமிழகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி.

Summary:

tmtk - captan vijayakanth - admit - in hospital

கேப்டன் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஒரு சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் தனது கட்சிக்காக பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். 
இந்நிலையில் அவருடைய குரல் வளம் மிகவும் மோசமானதால் பல்வேறு தரப்பினரும் 
அவருடைய கருத்துக்களை சித்தரித்து விமர்ச்சித்து பேசி வந்தனர். இதனால் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

Image result for vijayakanth

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு அவரால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் தனது இரங்கலை வீடியோ மூலம் தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அதில் தலைவர் கருணாநிதியுடன் அவர் பழகிய தருணங்களை நினைவு கூர்ந்தது பலரையும் ஆச்சரிய பட வைத்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கி சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு  சென்ற மாதம் துவக்கத்தில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு பிறகு வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து தேமுதிக வட்டாரத்தில் விசாரித்தபோது  தலைவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிந்ததும் வீடு திரும்புவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர்.


 


Advertisement