திமுக எம்.எல்.ஏ ரகுபதியின் வெற்றி செல்லும்..! சற்றுமுன்.. உயர்நீதி மன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரகுபதியின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ரகுபதி 58,201 வாக்குகளும், தவெக வேட்பாளர் சிந்தாமணி 56,709 வாக்குகளும் பெற்றனர். 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் ரகுபதி வெற்றி பெற்றார்.
ரகுபதியின் வெற்றியை எதிர்த்து சிந்தாமணி வழக்கு
திருமயம் தொகுதியில் ரகுபதியின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தவெக வேட்பாளர் சிந்தாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை தொடக்க நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என ரகுபதி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: செங்கோட்டையன் சொன்னது நடந்துடும் போலவே....! அதிமுக கோட்டையிலேயே கை வைத்த தவெக... விஜய பாஸ்கருடன் இணைந்த அதிமுக Ex அமைச்சர்கள்..!!!
தேர்தல் வழக்கை நிராகரித்த உயர் நீதிமன்றம்
ரகுபதி தரப்பின் மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சிந்தாமணி தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் திருமயம் தொகுதியில் ரகுபதியின் தேர்தல் வெற்றிக்கு எதிரான அந்த சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக, ரகுபதியின் வெற்றியை எதிர்த்து பொன்.பன்னீர்செல்வம் என்பவரும் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவை மனுதாரர் நேரில் ஆஜராகி தாக்கல் செய்யாமல், வழக்கறிஞர் மூலம் மட்டும் தாக்கல் செய்திருந்தார். தேர்தல் மனுவை மனுதாரர் நேரில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையை பின்பற்றாததால், அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த ஜூலை மாதமே தள்ளுபடி செய்திருந்தார்.
திருமயம் தேர்தல் முடிவில் தொடர்ந்த சட்ட சிக்கல்கள்
இதனால், 2026 தேர்தலில் திருமயம் தொகுதியில் ரகுபதி பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட முக்கிய தேர்தல் வழக்குகள் அடுத்தடுத்து முடிவுக்கு வந்துள்ளன. குறிப்பாக, வெறும் 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் முடிந்த போட்டியில் தவெக வேட்பாளர் சிந்தாமணி இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார்.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு ரெடி....! தவெகவில் இணைய தயார் நிலையில் இருக்கும் 20 முக்கிய புள்ளிகள்...! தெறிக்கவிட்ட செங்கோட்டையன்....!!!