ஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. டெலீட் செய்யப்பட்ட திருமாவளவனின் பதிவு.. தமிழக அரசியலில் சலசலப்பு.!
அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விசிக சார்பில் மதுஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, ஆளும் திமுக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஆளுங்கட்சிக்கு எதிராக மாநாடு நடத்துகிறது. இந்த மாநாட்டில் அதிமுக உட்பட மதுஒழிப்பு கொள்கையில் இணக்கம் உள்ள அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ளலாம் என திருமாவளவன் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
விசிக மது ஒழிப்பு மாநாடு:
இந்த விஷயத்திற்கு விளக்கம் அளித்த தமிழ்நாடு மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி, படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும். மதுபான கடைகளை திறந்து வைப்பதில் முதல்வருக்கும் விருப்பம் இல்லை என தெரிவித்து இருந்தார். விசிக்கவின் மாநாடு தமிழ்நாடு அரசியல் அளவில் பரபரப்பு சூழலை உருவாக்கி இருந்தது.
இதையும் படிங்க: நடிகர் விஜய்யின் தவெக மாநாடு தேதியில் மாற்றம்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு.!!
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு
இந்நிலையில், தேர்தலில் அரசியலில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற வாசகத்தையே கொள்கையாக முன்வைத்து விசிக தொடங்கி செயல்பட்டு வருகிறது. கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், அதிகாரம் வேண்டும் என்ற வாசகத்துடன் எம்.பி திருமாவளவன் பகுதி செய்த ட்விட் பதிவுகள் 2 முறை பதிவிடப்பட்டு பின் நீக்கம் செய்யப்பட்டன. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு சூழல் உருவாகி இருக்கிறது.
இதனிடையே, பழைய விடியோவை திருமாவளவன் பகிர்ந்ததாகவும், 1999 ம் ஆண்டு மேற்கூறிய கோரிக்கையை முன்வைத்தே விசிக களமிறங்கியது எனவும் விசிக விளக்கம் அளித்துள்ளது.
"ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு.." தனது 'X' தள பக்கத்தில் திடீரென தனது பழைய வீடியோவை பகிர்ந்த வி.சி.க தலைவர் திருமாவளவன்.!#VCK | #Thirumavalavan | #ThirumavalavanSpeech | #DMKAlliance | #PolimerNews pic.twitter.com/w9slJr4o8r
— Polimer News (@polimernews) September 14, 2024
வீடியோ நன்றிPolimer News
இதையும் படிங்க: மீண்டும் அதிமுகவில் இணைந்த மைத்ரேயன்; உற்சாகத்தில் கட்சித்தொண்டர்கள்.!