"அவுட் ஆஃப் கண்ட்ரோல் இல்ல; அண்டர் தி கண்ட்ரோல் தான்..." முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு சீமான் பதிலடி.!!

டெல்லியின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு இல்லை என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என தெரிவித்த அவர் நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
துணை முதல்வர் பதவி
2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போதே அரசியல் வட்டாரங்களில் தொடங்கிவிட்டது. பாஜகவுடன் எப்போதும் கூட்டணி அமைக்க மாட்டோம் எனக் கூறிய அதிமுக இப்போது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை அமைத்திருக்கிறது. மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சியும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சீமான் அந்தக் கருத்தை மறுத்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்தால் துணை முதல்வர் பதவி தருவதாக பேச்சுவார்த்தை நடந்தது என தெரிவித்துள்ளார். ஆனால் அதனை தான் மறுத்து விட்டதாகவும் கூறி இருக்கிறார்.
அடிப்படை மாற்றமே இலக்கு
நாம் தமிழர் கட்சியின் இலக்கு அடிப்படை மாற்றம் என சீமான் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்றிருப்பதால் தங்களுடன் இணையுமாறு பல கட்சிகளும் கேட்டு வருகின்றன. ஆனால் இங்கு அடிப்படையையே மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் இலக்கு என அவர் தெரிவித்திருக்கிறார். மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணியை வைத்துக்கொண்டு மாநில தன்னாட்சி பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் இருக்கும் திராவிட கட்சிகள் தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வருவதாகவும் அவர் குறை கூறினார்.
இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தல்... "முதல்வரை தீர்மானிக்கும் விஜய்..." அரசியல் விமர்சகர்கள் பரபரப்பு கனிப்பு.!!
அண்டர் தி கண்ட்ரோல்
மத்திய அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் தமிழக அரசு டெல்லியிடமிருந்து அவுட் ஆஃப் கண்ட்ரோலில் இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள சீமான், மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய பேரிடர் இழப்பீடு நிதி மற்றும் கல்வி நிதியை கொடுக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசு மத்திய அரசிற்கு செலுத்த வேண்டிய வரியை கொடுத்திருக்ககூடாது. அப்போதுதான் தமிழ்நாடு அவுட் ஆஃப் கண்ட்ரோலில் இருப்பதாக அர்த்தம். ஆனால் தமிழக அரசு, மத்திய அரசிற்கு வரி செலுத்தி இருக்கிறது. எனவே தமிழ்நாடும் அண்டர் தி கண்ட்ரோலில் தான் இருக்கிறது என அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: "டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்; ஆட்சில பங்கு கிடையாது.." இபிஎஸ் கருத்தால் புதிய சர்ச்சை.!!