அரசியல் தமிழகம்

முக்கிய வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி.! தந்தைக்காக களத்தில் இறங்கிய மகன்.!

Summary:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் களத்தில் இல்லாமல் வாக்கு சேகரிப்புகள் நடந்துவருகிற

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் களத்தில் இல்லாமல் வாக்கு சேகரிப்புகள் நடந்துவருகிறது. கடந்த சனிக்கிழமை மன்னார்குடி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் எஸ்.காமராஜ்க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு  தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் 4 இடங்களில் அடைப்பு இருப்பதும் அதில் இரு இடங்களில் சற்று கூடுதலான அடைப்புகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சை மூலம் அடைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மன்னார்குடி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் எஸ்.காமராஜ். 

இதனால் அவரால் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் தனது தந்தைக்காக களத்தில் இறங்கி அவரது மகன் ஜெயேந்திரன் என்பவர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தைக்காக மகன் ஜெயேந்திரன் பிரச்சார களத்தில் இறங்கி உள்ளதால் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Advertisement