அரசியல் தமிழகம்

நயன்தாரா திருமணம் வியாபாரமா அல்லது திருமணமா.? கடுப்பான சீமான்.!

Summary:

நயன்தாரா திருமணம் வியாபாரமா அல்லது திருமணமா.? கடுப்பான சீமான்.!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹேட்டலில் நடைபெற்றது.

இவர்களது திருமணம் முடிந்தும் இவர்களது திருமணம் குறித்து செய்திகள் வந்துகொண்டே இருந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தொலைக்காட்சி விவாதங்களில் என்ன நடக்கிறது.? நயன்தாரா திருமணம் வியாபாரமா அல்லது திருமணமா என்பது போன்ற விவாதம் நடக்கிறது.

என்னிடமே ஒருவர், அந்த திருமணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார், அதற்கு வேறு எதாவது கேளப்பா என சொன்னேன். இங்கு எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் போற்றப்படுவது இல்லை என தெரிவித்தார்.


Advertisement