அரசியல் சினிமா

தேமுதிக கட்சியுடன் கூட்டணி வைக்க பிரபல நடிகர் விருப்பம்! தொண்டர்கள் உற்சாகம்

Summary:

sarathkumar is ready to alliance with dmdk

விஜயகாந்த் விரும்பினால் தேமுதிக கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அறிவித்துள்ளார். மேலும் ரஜினி மற்றும் கமல் உடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்து இரட்டைஇலை சின்னத்தில் நின்று தேர்தலில் போட்டியிட்டார் நடிகர் சரத்குமார். இந்நிலையில் தற்போது அவர் விஜயகாந்துடன் கூட்டணி வைக்க விருப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.

sarathkumar and vijayakanth க்கான பட முடிவு

சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது விஜயகாந்த் விருப்பப்பட்டால் நான் தேமுதிக கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளேன் மேலும் கட்சி தொண்டர்கள் விருப்பப்பட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தயார். ஆனால் என்னுடைய நோக்கமெல்லாம் அடுத்த சட்டமன்ற தேர்தலை நோக்கி தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

சரத்குமார் இவ்வாறு பேசியிருப்பதன் மூலம் ரஜினி மற்றும் கமலுடன் அவருக்கு கூட்டணி வைக்க விருப்பம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.


Advertisement