சமாதானம் செய்யும் முயற்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சமாதானம் செய்யும் முயற்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


rajendrabalaji-social-

மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், ‘கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அது வளர்ந்தால் நாட்டுக்கே ஆபத்து’ என்று கூறினார். 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த கருத்து, மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாகவம், மாற்றுத்திறனாளி பெண் சுசீலா பொன்னுசாமி என்பவர் இந்த புகார் மனுவை அளித்துள்ளார். அதில் அவர், ‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு என்னை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள 22 லட்சத்துக்கும் லேமான மாற்றுத்திறானிகளையும், அவர்களது குடும்பத்தாரையும் காயப்படுத்தியுள்ளது. இதனால் அனைவரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.  எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்தும் ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்’. இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அமைச்சர் ராஜேந்தி பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘கமல்ஹாசனை விமர்சிக்கவே சப்பாணி என்று கூறினேன். அது அவர் நடித்த கதாபாத்திரம் என்பதால் அதை பயன்படுத்தினேன். 

மாற்றுத்திறனாளிகள் தெய்வத்தின் குழந்தைகள். அவர்களை காயப்படுத்தும் எண்ணம் இல்லை. ஆவின் நிறுவனத்தில் 15% மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.