ராஜபக்சேயின் ராஜதந்திரம் பிரதமர் பதவியை தக்கவைக்க தமிழர்கள் விடுதலையா? விழித்துக்கொள்ளுமா தமிழ் சமூகம்.!

ராஜபக்சேயின் ராஜதந்திரம் பிரதமர் பதவியை தக்கவைக்க தமிழர்கள் விடுதலையா? விழித்துக்கொள்ளுமா தமிழ் சமூகம்.!


rajapaksha - ranil vikramasinka - pirathamer

இலங்கை உள்நாட்டுப் போரின் போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழர்களை விடுவித்து தமிழ் எம்பிக்களின் ஆதரவைப் பெற்று பிரதமர் பதவியை  ராஜபக்சே தக்கவைத்துக் கொள்ளப் போவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கை தூக்கி எறிந்துவிட்டு புதிய பிரதமராக அதிபர் ராஜபக்சேவை நியமித்தார் அதிபர் மைத்திரிபால சிறிசேனா. இதன்மூலம் சிறிசேனாவின் உண்மை முகமும் தற்போது வெளிவந்துள்ளது.

tamilspark

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர், யார்? நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை நிரூபிக்கிறார்களோ அவர்களே பிரதமராக பதவி வகிக்க முடியும் என்று சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் வருகின்ற 16 தேதி வரை நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 225 உறுப்பினா்களை கொண்ட நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக 100 உறுப்பினா்களும், ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக 103 உறுப்பினா்களும் உள்ளனா். மீதமுள்ள 22 உறுப்பினா்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் 16 உறுப்பினா்கள் உள்ளனா். இலங்கை தமிழா்கள் மீது போா் நடத்திய காரணத்திற்காக ராஜபக்சேவுக்கு எதிராக நாங்கள் வாக்களிக்க உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தொிவித்துள்ளது. 

tamilspark

இந்த நிலையில் பிரதமர் பதவியை தக்க வைத்துக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. அதனால் 2009ஆம் ஆண்டு வரை இலங்கை அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு சிறையில் உள்ள தமிழர்களை விடுவித்து அதன்மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு சமாதானப்படுத்தி அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.

மேலும், பல எம்பிக்களுக்கு பணத்தை கொடுத்து சரிகட்டவும் தயார் நிலையில்  ராஜபக்சே இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதை உறுதி செய்யும் விதமாக ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். கூட்டமைப்பில் உள்ள சில தனி மனிதர்களின் சுய நல தேவைகளுக்காக ஒட்டு மொத்த தமிழ் சமூத்தின் அடையாளமாக திகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாளிகள் ஆக்கும் செயல்.