திமுக அரசை விமர்சித்த பாமக! தேர்தல் நேரத்தில் மட்டும் அப்பா, அண்ணன் வேஷம்! இதெல்லாம் எதுக்கு? முதல்வருக்கு எதிராக எழுந்து நின்ற பாமக!



pmk-supports-sanitation-workers-hunger-strike

சென்னையில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டம் அரசியல் ரீதியாகவும் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. போராடும் பணியாளர்களின் நிலை மேலும் மோசமாகும் சூழலில், அவர்களுக்கு பல்வேறு தரப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

உண்ணாவிரதத்தில் இருக்கும் பணியாளர்களை பாமக நேரில் சந்திப்பு

அம்பத்தூரில், தனியார்மயத்தை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட உள்ள தூய்மைப் பணியாளர்களை பாமக பொருளாளர் திலகபாமா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். உழைப்போர் உரிமை இயக்கம் தொடர்ச்சியாக நடத்தி வரும் இந்த போராட்டம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்...இரவோடு இரவாக தவெக கட்சிக்கு வந்த அதிர்ச்சி! இனி விஜய் எடுக்க போகும் முடிவு....!!

1953 பணியாளர்கள் பணி மறுக்கப்பட்டதால் எழுந்த புதிய பிரச்சினை

ஆகஸ்ட் 1 முதல் சென்னை மாநகராட்சி 1953 தூய்மைப் பணியாளர்களுக்கு பணிகளை வழங்க மறுத்ததால், அவர்கள் வருமானமின்றி கடும் சிரமத்தில் உள்ளனர். மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க முயற்சி செய்யப்படுவதை எதிர்த்து பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

உண்ணாவிரதத்துக்கு நீதிமன்ற அனுமதி—4 பெண்கள் மட்டுமே

எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் அம்பத்தூரில் 4 பெண்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. ஜெனோவா, பாரதி, கீதா, வசந்தி ஆகிய நான்கு பெண்களும் போராட்டத்தை தொடர்கின்றனர். அவர்களை நேரில் சந்தித்து பாமக சார்பில் உறுதியான ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

திமுக அரசை பாமக விமர்சனம்

முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று திலகபாமா வலியுறுத்தியுள்ளார். “கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு 10 லட்சம் வழங்கும் திமுக அரசு, தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏன் நிறைவேற்றவில்லை?” தேர்தல் வருகின்ற நேரத்தில் மட்டும் அப்பா மற்றும் அண்ணன் வேடமிடும் முதலமைச்சர் ஸ்டாலின் எளிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டு என கேள்வி எழுப்பியுள்ளார்.

தூய்மை பணியாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு எந்த முடிவை எடுக்கப் போகிறது என்பது சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களின் முக்கிய கவனமாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: அதிர்ச்சியில் எடப்பாடி! கடுமையான போட்டி... துரோகம் செய்தவர்களுக்கு இதுதான்! 2026 தேர்தல் கூட்டணி குறித்து டிடிவி தினகரன் வெளியிட்ட திடீர் அறிவிப்பு.!