தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
#BigBreaking: வரதட்சணை கொடுமை செய்த பாமக எம்.எல்.ஏ சதாசிவம்; மருமகள் பரபரப்பு புகார்.. விபரம் உள்ளே.!
பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம். இவரின் மனைவி பேபி. தம்பதிகளுக்கு சங்கர் என்ற மகன் இருக்கிறார்.
சங்கருக்கு கடந்த 2019ல் மனோலியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று முடிந்தது. தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இருவரின் மகிழ்ச்சிக்கு அடையாளமாக ஒன்றரை வயது குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், சங்கரின் குடும்பத்தினர் மனோலியாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக தெரியவருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மனோலியா, அங்குள்ள காவல் நிலையத்தில் மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, கணவர் சங்கர் ஆகியோருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனோலியா அளித்த புகாரின் பேரில் வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thanks: Way2News