பா.ஜனதா அரசும்; பழங்குடியினரின் நல்வாழ்வும்: நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்..!

பா.ஜனதா அரசும்; பழங்குடியினரின் நல்வாழ்வும்: நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்..!



PM Modi is proud of BJP government and well-being of tribals at the welfare program

குஜராத் மாநிலம், தபி மற்றும் வியாரா பகுதிகளில் ரூ.1970 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்பணிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வளர்ச்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது:-

இந்த நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு முழு மனதோடு நான் முயற்சி செய்வேன். இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், தபி மற்றும் நர்மதா உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் ஒட்டுமொத்த பழங்குடி மக்கள் பகுதி மேம்பாட்டுடன் தொடர்புடையவை.

பழங்குடியினரின் நலன் மற்றும் நல்வாழ்வு என 2 வகையான கொள்கைகளை பா.ஜனதா அரசு கொண்டுள்ளது. அவற்றுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. ஒரு பக்கம் பழங்குடியினரின் நலன் குறித்து யோசிக்காத கட்சிகள் உள்ளன. பா.ஜனதா கட்சி பழங்குடியினர் நல்வாழ்வுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது.

பா.ஜனதா கட்சி எந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வருகிறதோ, அந்த மாநிலத்தில் பழங்குடியினர் நல்வாழ்வுக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறது. கடந்த 7-8 ஆண்டுகளில் பழங்குடியினர் நலனை முன்னிறுத்தி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. அவர்களின் நலனுக்காக திட்டங்களுக்காக பட்ஜெட்டில் 3 மடங்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவரது ஒத்துழைப்புடன் வளர்ச்சியடைந்த குஜராத்தை, வளர்ச்சி அடைந்த இந்தியாவை நாம் கட்டமைப்போம். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.