"அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டு பயப்படும் மோடி"! ஆம் ஆத்மி கட்சியினரின் நூதன பிரச்சாரம்.!!pm-modi-afraid-of-arvind-kejriwal-aam-aadmi-party-new-c

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவரது காவல் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கெஜ்ரிவாலின்  கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியினர் நூதனமான போராட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக கூறிய அமலாக்கத் துறையினர் இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பினர். இது சட்டத்திற்கு விரோதமானது எனக் கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து சம்மனையும் நிராகரித்தார். இதனையடுத்து கடந்த 21 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

politicsஇதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கைதிற்க்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் இந்தியா கூட்டணி சார்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கெஜ்ரிவாலின் கைதிற்க்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் நூதனமான பிரச்சாரம் ஒன்றை தொடங்கி இருக்கின்றனர்.

"அதன்படி மோடி அதிகம் பயப்படும் நபர் அரவிந்த் கெஜ்ரிவால்" என்ற வாசகத்துடன் கெஜ்ரிவால் சிறை கம்பிகளுக்கு பின்னால் இருக்கும் புகைப்படத்தை தங்கள் சமூக வலைதளங்களில் முகப்பு புகைப்படமாக வைத்து தங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.